இஸ்லாம் உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றானது, மேலும் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு அதன் விளைவாக எந்நேரமும் அறிவின் திரிபுக்கு ஆளானதும் இஸ்லாம்தான். அரசியல், பொருளாதார, ஊடக மற்றும் இன்னும் பல்வேறு தளங்கள் இஸ்லாம் மதத்தை சித்தரித்து அது தவறாக வழிநடத்தும் மதமாக கட்டமைத்து வருகின்றனர்.

இத்தனை தங்கு தடைகள், இடையூறுகள் இருந்த போதிலும், அதை புரிந்து கொள்ள ஒவ்வொரு சூழ்நிலையையும் இஸ்லாமிய தரநிலைகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களுடன் நன்கு விசாரித்து தொடர்புபடுத்துவதுதான் சரியான வழியாகும்.

இஸ்லாம் பற்றிய கணிசமான தவறான கருத்துக்கள் கொண்டு முஸ்லிம்களுடன் மற்றவர்கள் வாதிடுவது,

தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தது “நல்லொழுக்கம் மற்றும் சிறந்த பண்புகள் கொண்டவரே உங்களுக்குள் சிறந்தவராவார்.”

மேற் சொன்ன கூற்றுக்கு அடிபணியும் ஒரு முஸ்லிம், வீணான ஒரு வார்த்தையையும் உச்சரிக்காமல், வதந்திகளை பரப்பாமல் மற்றும் புறம் பேசாமல் இருக்கவேண்டும், ஏனெனில் எல்லாம் வல்ல இறைவன், எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவன் ஒருவருடைய வார்த்தைகளையும் செயல்களையும் (அவை நல்லது அல்லது கெட்டதாக இருந்தாலும்) தொடர்ந்து கண்காணித்து வருகின்றான்.

முஸ்லீம்களின் கூற்றுப்படி, தொடர்ந்து பின்பற்ற வேண்டிய உலகளாவிய பண்புகள்

  • எந்நேரமும் உண்மை பேசுபவராக இருப்பது
  • ஒருவர் தனது வார்த்தையில் நிலைத்திருப்பது
  • வழிபாட்டு சுதந்திரத்தை ஆதரிப்பது
  • பெற்றோர் மற்றும் இதர முக்கிய உறவுகளுக்கு கீழ்படிதல்
  • ஏழைகளுக்கும் தேவைப் பட்டோருக்கும் உதவுவது
  • புறம் பேசாமல், ஏமாற்றாமல், குற்றம் காணாமல் மற்றும் பொய் பேசாமல் இருப்பது

சமுதாயத்திற்கு சாதகமானவற்றை வழங்கி, தமது வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ அறநெறியுடன் மற்றவர்களுடன் பழக முஸ்லிம்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.