Smiley face

முஸ்லிம்கள் காட்டுமிராண்டித்தனம் கொண்டவர்களா?

இஸ்லாம் பரவியதின் முதலாவதான காரணம் அதன் சாதாரண கொள்கைகளாகும். இஸ்லாம் ஒரே சிந்தனையில் நிலைத்திருக்கிறது, அதாவது வணக்கத்திற்கு தகுதியுடவன், ஒரே ஒரு இறைவனே அதாவது அல்லாஹ். மேலும் அல்- குர்’ஆனில் விளக்கப்பட்டுள்ள விஞ்ஞான அறிகுறிகளை அறிவாற்றலால் சிந்திக்க அது அழைக்கிறது.

அல்-குர்’ஆன் மனித குலத்திற்கு வழிகாட்டும் ஒரு நல்லொழுக்கத்திற்குரிய புனித புத்தகமாக முஸ்லிம்கள் மதித்து நம்புகின்றனர். இதில் எல்லாம் வல்லவனால் அறிவிக்கப்பட்ட பொக்கிஷமான சிந்தனைகள் இருக்கின்றன. இப்புனித புத்தகத்தில் கூறியிருப்பதாவது :

”ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!” (அல்-குர்’ஆன் 20:114)

குறிப்பிட்டது போல் முஸ்லிம்கள் செறிவூட்டிய ஞானத்தையும் அறிவின் வளர்ச்சியையும் அல்லாஹ்விடமிருந்தே நாடுகின்றனர். அது ஒருவருடைய வாழ்வை வளர்ச்சியின் பாதையில் அமைத்துவிடுகிறது.