Smiley face

அனைத்து விஷயங்களிலும் நல்லதையடைய பாதிக்கப்பட்டவருடைய திருப்திக்கு ஒப்ப ஒரு நடைமுறை தீர்வுக்கு வருவது கட்டாயமாகும்.

சமுதாயத்தில் ஒவ்வொரு மதத்திலும் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும் கெட்ட செயல்களை புரிய வேண்டாம் என்று அறிவுறை வழங்குவதற்குப் பதில் இஸ்லாமிய சட்டங்கள் அம்மதங்களிலிருந்து சில படிகள் முன்னுக்குச் சென்று ஒரு சரியான தீர்வு வழங்குகின்றன.

உதாரணத்திற்கு ஒருவர் தன்னுடைய உயிர் பிழைக்க திருடுகிறார் என்று கருதிக்கொள்ளுங்கள், அவர் வறுமையால் அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார். இஸ்லாம் அதற்கான ஒரு தீர்வு “ஜகாத்” (இஸ்லாமின் ஐந்து தூண்களில் ஒன்று) என்ற பெயரில் கொடுக்கிறது. இந்த பழக்கத்தால், குறைந்தது 85 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்பை பணமாக வைத்திருக்கும் ஒவ்வொரு செல்வந்தரும் அவருடைய மொத்த சேமிப்பில் 2.5% ஒவ்வொரு பிறை வருடமும் தானமாக ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். இது புனித குர்’ஆனில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (அல்-குர்’ஆன் – 59:7)

அது போலவே, ஷரியாஹ் சட்டங்கள் ஒரு குற்றம் எவ்வாறு குறைக்கப்படவேண்டும் என்று ஒரு தீர்வை வழங்குகின்றன. இருப்பினும், இந்த சட்டங்களுக்கு அடிபணியாதவர், தாமதமின்றி கடுமையாக தண்டிக்கப்படுவர்.