தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இஸ்லாமை ஸ்தாபித்தார், என்பது.?

இஸ்லாம் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் 1400 வருடங்களுக்கு முந்தி அரேபியாவின் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டதாக பலர் தவறான கருத்து கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால், இஸ்லாமின் வருகையும் தோற்றமும் ஆதாம் (அலைஹிஸ் ஸலாம்) தோன்றிய நாளிலிருந்து இருப்பதாகும். அவர்தான் ஒரே ஒரு இறைவனை வழிபட்டு வந்த மனித குலத்தின் முதல் மனிதர். பின்னர் வந்த தூதர்கள் அத்தனை பேரும் முஸ்லிம்களே, மேலும் அவர்கள் அல்லாஹ்தான் கூட்டாளி மற்றும் குழந்தைகளின்றி உண்மையான படைப்பாளியாக இருக்கின்றான் என்று போதித்தனர். ஒரு உண்மையான முஸ்லிம் தன்னை உண்மையான இறைவனிடம் அர்ப்பணித்து, தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இறுதி தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்கின்றான்.

அல்லாஹ், முஸ்லிம்களுக்கு மட்டும்தான் இறைவன்:

அல்லாஹ் என்பதற்கு உண்மையான அர்த்தமே அரபிக் மொழியில் “சத்தியமான ஒரே இறைவன்” என்பதாகும். இந்த வார்த்தை பிரபஞ்சத்திலுள்ள ஆகாயம், பூமி, கடல், மலைகள் மற்றும் அனைத்தையும் படைத்தருளியவன் என்பதை குறிக்கிறது. அரபிக் மொழி பேசும் கிறுஸ்துவர்களும், யூதர்களும் இறைவனை அல்லாஹ் என்றே அழைக்கின்றனர். ஆக, நம்முடைய நம்பிக்கை / விசுவாசம் சகல வல்லவனான மற்றும் பல பெயர்களுடன் (அல்லாஹ், யாவெஹ் அல்லது காட், ஃபாதர்) குறிக்கப்படும் ஒரே ஒரு இறைவன் அல்லாஹ் மீது இருக்கவேண்டும்.

மத சகிப்புத்தன்மையின்மை

புனித அல்–குர்‘ஆனில் அறிவிக்கப்படது போல் மற்ற மதங்களை மதித்து சுதந்திரம் அளிக்க இஸ்லாம் தவறுவதில்லை “மதத்திற்காக உங்களிடம் போரிடாதவர் அல்லது உங்களை இல்லங்களிலிருந்து வெளியேற்றாதவர் அத்தகையோருடன் நீங்கள் நேசமாக இருந்து அவர்களுடன் நியாயமாக செயல்பட இறைவன் உங்களை தடுக்கவில்லை, நியாயக்காரர்களை இறைவன் நேசிக்கின்றான்.”

தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் யூதர்களுக்கும் மற்ற மதத்தவர்களுக்கும் அவர் காலத்தில் பாதுகாப்பு அளித்து அவர்களுடன் வழக்கடுவது மற்றும் தவறாக பேசுவதைப்பற்றி எச்சரித்தார்.