Smiley face

எங்கள் நோக்கமும் நாட்டமும்

அமைதியும் சாந்தியும் கொண்ட இஸ்லாம் என்ற மார்க்கம் இந்த உலகில் உள்ள மிகப்பெரிய மதங்களில் ஒன்றாகும். மேலும், இது பல காரணங்களால் மிகவும் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்ட மார்க்கமாகும். அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ பரப்பப்படும் ஒரு பிரச்சாரமாகவும் அது இருக்கலாம். இஸ்லாமைப் பற்றிய தவறுதலான அனைத்து கருதுக்களையும் நிவர்த்தி செய்வதுடன் முஸ்லிம் மக்கள் நடைமுறையில் உண்மையிலேயே பழகி வரும் நன்னெறிகளை பரப்புவதே எங்கள் தலையாய நோக்கமாகும்.

இஸ்லாம் வாழ்க்கையின் நோக்கத்தை கற்பிக்கும் தனக்கே சொந்தமான கறை படாத கலாச்சாரம் மற்றும் நவீன கால பண்பாட்டினால் பாதிக்கப்படாத ஒரு போக்கை கொண்டுள்ளது. இங்கு தான் நமது நோக்கம் சமுதாயத்திற்கு சாதகமானதொரு பங்களிப்பை வழங்குவதற்கும், அறநெறி மற்றும் நேர்மையான செயல்களால் வழிநடத்தும் ஒரு தீர்க்கதரிசனத்துடன் செயல்படுகிறது.

வாழ்க்கையின் நோக்கம்

செல்வந்தராவது தான் ஒருவருடைய நோக்கமாக இருக்குமேயானால், அந்த செல்வத்தையடைந்த பின்னர், மேற்கொண்டு யாதொரு அந்தஸ்தையும் அடைந்து சாதிக்க அங்கே ஒன்றுமே இருக்காது என்பதை நினைவு கூர்ந்து கவனியுங்கள்.

நமது உடற்கூற்றூக்கள் அனைத்திற்கும் அதனதன் நோக்கம் இருப்பதைப்போலவே தனிப்பட்ட முறையில் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது என்பது ஒரு வெட்டவெளிச்சமான உண்மை. ஒரு நோகமின்றி நாம் அலையவோ அல்லது வெறும் நமது அன்றாட இயல்புணர்வுகளையும் ஆசைகளையும் பூர்த்திசெய்துகொள்ளவோ மகிமை வாய்ந்த, ஞானமுள்ள இறைவன் நம்மை இவ்வுலகில் படைத்தருளவில்லை. ஆனால், நாம் அனைவருக்கும் அந்த ஒரே ஒரு இறைவனான ‘அல்லாஹ்’வையே வழிபடும் ஒரு நோக்கமுள்ளது, ஏனெனில் நேர்வழியானது தனிப்பட்ட நன்நெறிகள் உள்ளடங்கி, சமுதாயத்திற்கு பயனளிக்கும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நம்மை அமைதியான சூழ்நிலையில் வாழ வழிநடத்தும்.

எல்லாம் வல்லவனுக்கு நெருக்கமாக இட்டுச் செல்லும் நன்நெறிகள் :

ஒவ்வொரு நாளும் ஐவேளை வழிபடுவது (தொழுதல்)

நேர் வழியில் சம்பாதிப்பது

ஒடுக்கு முறையை எதிர்ப்பது

அனாதைகளை பரிபாலிப்பது

சமுதாயத்திற்கு நன்மை பயப்பது

சமுதாயத்திற்கு உதவுவது

பெற்றோருக்கு அடிபணிவது

பொறுமையுடனும் பணிவுடனும் இருப்பது

அநீதிக்கு எதிராக எழுவது

குடும்பத்தை பரிபாலிப்பது

சத்தியத்தைப் பேசி நியாயத்தை நிலை நாட்டுவது

இறையச்சம் ஊட்டுவது

அனைத்தின் ஞானமும் கொண்ட அல்லாஹ் இவ்வாழ்க்கையை ஒரு பரிட்சையாக வர்ணித்து அவனால் இந்த மனித குலம் பல விதங்களில் சோதனைக்குட் படுத்தப்படுகிறது. ஒரு நிகழ்சியை கட்டுப்படுத்தும் திறமை நமது கையில் இல்லை எனினும், அதன் அணுகு முறையை கையாளும் வழிவகை நம்மிடம் உண்டு.

கடினமான நேரங்களில் பொறுமை சாதித்து நமக்கு அளிக்கப்பட்ட அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்துவதே நாம் நித்திய சொர்க்கத்தை அடைய இயலும் வழிமுறைகளாகும். ஒரு முன்னெச்சரிக்கையாக, அல்லாஹ்வுடைய கட்டளைகளின் நிராகரிப்பு மற்றும் அவன் மீது நம்பிக்கையற்ற போக்கிற்கான நரக தண்டனையைப் பற்றி முன் கூட்டியே நாம் எச்சரிக்கப்பட்டுள்ளோம்.

ஒருவர் தன்னுடைய ஞானம் மற்றும் அறிவாற்றலால் சிறந்த முறையில் சிந்தித்து, அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை கவனித்து அவைகளை அடையாளம் கண்டு அல்லாஹ்வின் வழி காட்டலில் தனது வாழ்க்கையை கழிப்பதில் தான் பெரும்பாலாலான இறை நம்பிக்கையுள்ளது. இது தான் வாழ்க்கையின் யதார்த்தமான நோக்கமாகும். மேலும் அதை சாதிப்பவர் தான் முஸ்லிம் என்பவர் ஆவார்.

இஸ்லாம் – ஒரு சத்திய மார்க்கம்

தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அடிபணியச் செய்வதே “இஸ்லாம்” என்ற வார்த்தைக்கு அர்த்தமாகும், அது அமைதி மற்றும் சாந்தியையும் குறிக்கிறது. அதாவது அல்லாஹ்வை அடிபணிந்து அமைதி மற்றும் சாந்தியை நாடுவதே இஸ்லாம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகும். ஒரு மனித பிறவி அவனுடைய வாழ்நாள் முழுவதும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை வழிபட்டு, தான் செய்த காரியங்களுக்கு பொறுப்பாளியாகவும் பதிலாளியாகவும் இருக்கும் நோக்கத்தை இஸ்லாம் கற்பிக்கிறது.

அல்லாஹ்வுடனும் அவனுடைய படைப்புகளுடனும் ஒரு மனிதன் மிக இயல்பாக தன்னுடைய உறவை எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்த கற்றுக்கொடுப்பது இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே. இது அறநெறி மற்றும் நற்பண்புகளால் மட்டுமே அடையப் பெற்று நித்திய வாழ்வில் இறைவனுடைய பிரியத்தை நாட முடியும் என்பதை இஸ்லாம் போதிக்கிறது.

பிரபஞ்சத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்திற்கும் ஒரு அமைப்பாளன் இருந்திருக்க வேண்டும் என்று தன்னிச்சையாக சிந்திக்கும் ஆற்றல் மனிதனைத் தவிர வேறு எந்த படைப்பிற்கும் கிடையாது. ஒரு வலிமைமிக்க படைப்பாளனின் இருத்தலுக்கு சாட்சியளிக்கும் தர்க்கரீதியான சிந்தனையை ஒழுங்காக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த சுற்றுசூழலின் அமைப்பிற்கு இஸ்லாம் பொருந்தச் செய்கிறது.

இந்த வழியில்தான் இறுதியில் அனைத்து படைப்புகளின் தோற்ற மூலமாக இருக்கும் நிஜமான மற்றும் புனிதமான சக்தி ஒன்று பிரபஞ்சத்தில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சகல வல்லமை கொண்ட படைப்பாளனை முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனர்.

பிரபஞ்சம் முழுக்க தீர்க்கதரிசிகளால் (இறைவனின் தூதர்களால்) வழிபடப்பட்ட அந்த இறைவனைத்தான் முஸ்லிம்களும் வழிபடுகின்றனர். ஆச்சரியமாக, அரபிக் மொழி பேசும் கிறுஸ்தவர்களும் யூதர்களும் இறைவனை “அல்லாஹ்” என்றுதான் அழைக்கின்றனர்.

இஸ்லாம் உடைய உண்மையான அழகு, சமரசம் இல்லாமல் இறைவனின் முழுமையான பரிபூரணத்தையும், உயர்ந்த தன்மையையும், தனித்துவத்தையும் அங்கீகரிப்பதில் தான் இருக்கிறது.

உலகில் மரபு, வம்ச வழி இருப்பதினால், தன் கட்டளைகளை பிரகடனப்படுத்த புனிதவனான அல்லாஹ் தானே உலகில் தோன்றவேண்டிய அவசியமில்லை. பதிலுக்கு ஒரு சிலரை நமக்கிடையே தேர்ந்தெடுத்து தனது செய்திகளை ‘வஹி’ என்ற திருவெளிப்பாட்டினால் அவர்களுக்கு அனுப்பிவைத்து, அச்செய்திகள் நம்மிடம் வந்தடையச் செய்கின்றான். அவ்வாறு அல்லாஹ்வினால் தேர்ந்தெடுத்து நியமிப்பட்டவர் தூதர் (அதாவது இறைத் தூதர்) எனப்படுவர். அவர்களில் ஒருவரே இறைத்தூதர் முஹம்மத் ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - அவர் மீது அல்லாஹ் உடைய சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) என்பவராவார். அவர்தான் இவ்வுலகத்திற்கு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர்.

குர்’ஆன்

மனித குலத்திற்கு வழிகாட்டும் கையேடு குர்’ஆன் என்ற வேத நூலைத் தவிர வேறொன்றும் இல்லை. மனிதனாகிய நமக்கு என்ன தேவை என்பதை நம்மை படைத்த இறைவன் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். ஆகவே நன்மை தீமைகளை நமக்கு கற்பிக்க அவனே மனித உருவில் உலகில் பிரவேசிக்கும் அவசியமில்லை.

குர்’ஆனுக்கு முந்தி இதே போன்ற புனித வேத நூல்கள் அக்கால மக்களுக்காக வெளிப்படுத்தப்பட்டன. இருப்பினும் குர்’ஆனை நீதிநாள் வரை பாதுகாக்கும் பொறுப்பு அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்
பட்டிருக்கிறது.

வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளிலும் மனித குலம் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை எது என்று குர்’ஆன் வழி காட்டுகிறது.

வழிபாட்டின் நோக்கம்

முஸ்லிம்களின் வழிபாட்டு முறை உலகின் மற்ற மதங்களுடன் இணையற்றதாகும். வழிபாட்டின் குறிக்கோள் சர்வவல்லமை படைத்த அல்லாஹ்வினால் புனித குர்’ஆனில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாவது:

“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே
நீங்கள் வணங்குங்கள்;…. என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை
அனுப்பி வைத்தோம்;….” (அல் குர்’ஆன் – 16:36)

இஸ்லாம் உடைய வழிபாட்டில் ஒரு தனித்துவமான பங்காற்றல் உள்ளது. அது ஒரு நபரை தனது வாழ்க்கையை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராக குறிக்கிறது.

பிந்திய வாழ்க்கயின் மீது நம்பிக்கை

நாம் இறந்துவிட்ட பின்னரும் நமது உயிர் ஒரு ஆவியின் உருவில் நித்தியமானது, மற்றும் உடல் சார்பாக உயிர்ப்பித்து எழக்கூடியது. நற்காரியங்களை புரிந்தோர் அல்லாஹ்வினால் வரவேற்கப்படுவர், எதிராக மற்றவர் அவர்களுடைய தீய செயல்களுக்காக தண்டிக்கப்படுவர்.

அல்லாஹ்விடமிருந்து திருவெளிப்பாடு – “வஹி”

அவன் நாடுபவருடன் தொடர்பு கொண்டு அவருக்குத் தேவையான ஞானத்தை அளித்தருள அல்லாஹ் பணிக்கும் நடவடிக்கைதான் திருவெளிப்பாடு “வஹி” என்பதாகும். இந்த அறிவுடன் பெறப்பட்ட செய்திகள், தூதர்களால் தமது மக்களுக்கு அறிவிக்கப்படும்

அநேகமாக அனைத்து தூதர்களும் அல்லாஹ்விடத்திலிருந்து அவன் அனுப்பிய திருவெளிப்பாட்டை பெற்றனர்.

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யாஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (4:163)
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். (4:164)

வாழ்வின் மீதான முஸ்லிம்களுடைய கண்ணோட்டம்

வாழ்க்கையின் நோக்கத்தையும், நல்லதானாலும் கெட்டதானாலும் ஒவ்வொரு சூழ் நிலையையும் எவ்வாறு பிரதிபலிப்பது என்று மனித குலத்திற்கு இஸ்லாம் கற்றுக்கொடுக்கிறது.

நல்லது நடக்கையில் நன்றியுள்ளவனாக இரு

கெட்டது நடக்கையில் பொறுமையுடன் இரு

இந்த வாழ்க்கை ஒரு சோதனை எனபது மறவாதே

நீ செய்யும் காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் காண்கின்றான்

அவனுடைய விருப்பமின்றி அணுவும் நகராது

உனக்கு சொந்தமானதெல்லம் இறைவனிடமிருந்து நீ பெற்றதுதான்

உனது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதின் மீது கவனம் செலுத்தி சிறந்ததைச் செய்

நீதி நாளன்று அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் சென்று கேள்விக்குட்படுத்தப்படுவர்.