எங்களை-பற்றி
தங்களுடைய பொன்னான நேரத்தில் சிறிது நம்முடைய சாந்தியும் சமாதானமும் நிறைந்த செய்திக்காக ஒதுக்கிட்டதற்காக நாம் நன்றி செலுத்துகிறோம். இறைவன் நாடினால், இங்கே பதிவு செய்திருக்கும் இச்செய்தியை நீங்கள் நிச்சயமாக பயனுள்ளதாக காண்பீர்கள் ஏனெனில் நாம் பதிவு செய்திருக்கும் அனைத்தும் ஜாதி, மத, குல வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உலகளாவிய சகோதரத்துவத்தைப் பற்றிதான்.
நீங்கள் அறிந்தது போல பயங்கரவாதம் என்ற வார்த்தை வார்ப்பெடுக்கப்பட்டு உலக ஊடங்களால் தமது மூல மந்திரமாக இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, நாம் இப்பொய் பிரசாரத்தால் பாதிக்கப்பட்டாலும், ஒரு பொறுப்பான சமுதாயமாக இருப்பதனால், நமது பங்காக நம்மால் இயன்ற வரையில் முயற்சித்து இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களைப் பற்றி உலகில் நிலவும் அவநம்பிக்கை, உண்மையான அறிவின் உருச்சிதைப்பு, முஸ்லிம்களின் நடவடிக்கைகளைப் பொருத்து மக்களின் மனதில் புகுத்தப்பட்ட மற்றும் திணிக்கப்பட்ட தவறான கணிப்புகள் ஆகியவைகளை களைத்து எறிய நாம் கடமைப்பட்டுள்ளோம். நமது இந்த சிறிய முயற்சி, குன்றின் மீது இட்ட ஒரு விளக்கைப் போன்றதாகும். என்பதை நாம் அறிவோம். இறைவன் நாடினால் இதுவே பிரகாசித்து வெகு தூரம் வரையில் ஒரு கலங்கரை விளக்கமாக ஒளிரும் என்ற நம்பிக்கையுடன் நாம் தொடர்கிறோம்.
உண்மையில், நமது பங்கின் ஒரு பகுதியாக இந்த இணையத்தை நாம் நிறுவியிருக்கிறோம். இங்கே நாம் கண்ணியமான முறையில் ஊடகங்களால் நல்லுங்களில் விதைக்கப்பட்ட தவறான கருத்துகள், கணிப்புகள் மற்றும் தீர்ப்புகளை அறிவுபூர்வமான விளக்கங்களுடன் அப்புறப்படுத்தி இஸ்லாம் உண்மையில் போதிக்கும் சாந்தி, சமாதானம், அமைதி, சகோதரத்துவம் ஆகியவைகளை உங்கள் சிந்தனைக்கு ஒரு விருந்தாக படைத்திருக்கிறோம்.
இந்த செய்தி கிடைக்கப் பெற்ற முஸ்லிம் சகோதரர்களை நாம் கேட்டுக்கொள்வதாவது, அவர்கள் முஸ்லிம் அல்லாத தமது நண்பர்களிடம் எடுத்துரைத்து, நமது இணையத்தை அணுகச் செய்வது தான்.
அனைத்திலும் சிறந்ததாக, அல்-குர்’ஆன் ஒரு மனிதனுடைய சிறப்பான அம்சத்தை கீழ்கண்டவாறு கூறுகிறது :
“……நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்…….”(ஆல்-Qur’an 5:32)
மத நல்லிணக்கம் என்பது ஒருவர் மற்ற மதத்தை சரிவர புரிந்துகொண்டால் மட்டுமே சாத்தியமாகும் எங்களின் தலையாய நோக்கமும் அதுவே.
நீங்கள் இங்கு பகிரப்படும் பதிவுகளை படித்து, புரிந்து உங்களது கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்