பெண்கள் அடக்கு முறை

இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் ஒன்றாகத்தான் நடத்துகிறது, இருப்பினும் அவர்கள் வேறுபட்டவர்களே ஆவர். உயிரியல், உடல் தோற்றம் மற்றும் உளவியலின் இருப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு படைப்பின் அம்சங்களையும் கருத்தில் கொண்டு இருவரும் மண வாழ்க்கைக்கும் / தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தமது நிலையின் பங்களிப்பு அளிக்கின்றனர்.

ஸஹீஹ் புகாரி என்ற புத்தகத்தின் தொகுதி 8, பண்புப் புத்தகம் அத்தியாயம் 2, ஹதீஸ் 2ல் கூறப்பட்டுள்ளதாவது, ஒரு முறை ஒருவர் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இடம் வினாவி கேட்டதாவது “யார் இந்த உலகில் மிகவும் அன்பு மற்றும் தோழமைக்கு தகுதியுடையவர்?” அதற்கு தூதர் அறிவித்தார். “அது உன்னுடைய தாய்”, பின்னர் அவர் கேட்டார், “அடுத்து யார்?” மீண்டும் “அது உன்னுடைய தாய்” என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது, மூன்றாவது முறையாக அவர் கேட்டபொழுதும், “அடுத்தது உன் தாய்தான்” என்று பதில் கிடைத்தது. இறுதியில் நான்காவது முறையாக அவர் வினாவிய பின்னர், “அது உன்னுடைய தந்தை” என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. இது எந்த ஒரு நேரத்திலும் பெண்களை அடக்கியாளுவது கூடாதென்றும், அவ்வாறு அடக்கி வைத்தால் அது அவர் மீது பெரிய பாவச் செயலாக திரும்பும் என்பதையும் கடுமையாக அறிவிக்கப்படுகிறது.

அடிக்கடி, முஸ்லிம் பெண்கள் அடக்கப்படுவதாக சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், சமுதாயத்தின் தீய பார்வைகளிலிருந்து அவர்கள் பாதுகாப்பு நாடுகின்றனர்.

உதாரணத்திற்கு, ஒரு பெண் முக்காடு அணிந்தால், அவளால் அனுமதிக்கப்பட்டதையே மற்றவர்கள் காண முடியும். இது தனிப்பட்ட பலத்தை அளித்து, அவளுடைய கண்ணியத்தை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.

ஹிஜாப் (முக்காடு) மீது தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உடைய சிறந்த ஒரு கூற்று “ஹயா (தன்னடக்கம், நாணம்) நன்மையைத் தவிற வேறு எதையும் கொண்டு வருவதில்லை.”

வேறுபட்ட சூழ்நிலைகளில் இஸ்லாம் பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கிறது. அவைகளில் சில,

  • ஒரு பெண் அவள் சம்பாதித்த அல்லது மரபுரிமையாக பெற்ற சொத்தை அவளே தக்க வைத்துக்கொள்ளலாம்.
  • மற்ற மதங்களைப் போலவே, இஸ்லாமும் பெண்களை அரசியல், சட்டம் மற்றும் வர்த்தகம் பழக ஊக்குவிக்கிறது
  • போர்களம் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்காகவும் என்று இஸ்லாம் கூறுகிறது. அவர்கள் வெவிலிகளாக மட்டுமின்றி போர் வீராங்கனையாகவும் பங்குபெறலாம்
  • அவளுடைய விருப்பமின்றி ஒரு ஆண் அவளை மணமுடிக்க நிர்பந்திக்க முடியாது. அவளுடைய விருப்பப்படி, தன் உயிர்த் துணையை தேர்ந்தெடுக்கு அவளுக்கு முழு சுதந்திரம் உண்டு.
  • இஸ்லாம் மதத்தில் பெண்கள் எந்த ஆதரமுமின்றி அவர்களுடைய குழந்தைகளின் உரிமையைக் கோரலாம்.
  • ஒருவருடைய மகளாக இருந்து சகோதரர்களுடன் ஒப்பிடுகையில் பாதி சொத்தை மரபுரிமையாக பெறலாம்

தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெண்களைக் குறித்து தனது இறுதி யாத்திரையின் உரையில் உலக முஸ்லிம்களை எச்சரித்துள்ளதாவது.

“பெண்களைப்பொருத்து அல்லாஹ்வை நோக்கி உங்கள் கடமையை கவனியுங்கள், மேலும் அவர்களை சிறந்த முறையில் நடத்துங்கள்.”

அறிவிக்கப்பட்டது போல், பெண்களை தாராள மனப்பான்மையுடன் நடத்த முஸ்லிம்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். தவறினால் சம்பந்தப்பட்ட குற்றவாளி அல்லாஹ்வினால் தீர்ப்பு நாளில் கேள்விக்குட்படுத்தப்பட்டு, தகுந்த தண்டனைக்குரியவராவார்.