ஹீஜாப் (முக்கடு) எதற்கு

முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் ஹிஜாப் (முக்காடு) வலியுறுத்தும் நோக்கமென்னவென்றால், இந்த நீண்ட ஆடை, அவளுடைய முழு உடலையும் கண்ணியமாக மறைத்துக்கொண்டு அது வெளியே அம்பலமாகாமல் பாதுகாக்கிறது. அவர்களுடைய உடல்கட்டை மறைக்க வெளியாடையாக அதை உடுத்தும்படி கூறப்பட்டுள்ளது. அவளுக்கு நெருக்கமாக இல்லாத ஆடவர்களின் முன்னிலையில் அவளுடைய கைகள் மணிக்கட்டு முதல் மற்றும் முகம் மூடாமல் இருக்கலாம். ஹிஜாப் அணிவது அவளுடைய தோற்றத்தை மட்டும் மாற்றாமல், அவள் பேசும் விதம், நடக்கும் விதம் மற்றும் சமுதாயத்தில் மற்றவருடன் அவளுடைய நடத்தை அனைத்தையும் மாற்றிவிடுகிறது

முஸ்லிம் ஆண்களும், பெண்களும் எந்த கேள்வியுமின்றி எல்லாம் வல்லவனின் கட்டளைக்கு அடிபணிகின்றனர், ஏனெனில் தனது படைப்புகளுக்கு நல்லது எது என்பதை அவன் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

இஸ்லாம் ஹிஜாப் மூலம் பெண்களின் அதிகாரத்தை ஊக்குவிக்கிறது, அது அவளுடைய உடல் தோற்றத்திற்கு பதிலாக ஆன்மீக அழகிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சமுதாயத்தில் தமது பங்கை அளிக்க பெண்கள் நாணத்தை விட்டுக்கொடுக்காமல் செயலாற்றலாம். ஹிஜாப் மூலம் பெண்களின் மீது இஸ்லாம் அடக்கு முறையையோ, ஒடுக்கு முறையையோ என்றைக்கும் திணித்ததில்லை. சமூக விரோதிகளுக்கு எதிராக இது பெண்களுடைய முதல் சுய-பாதுகாப்பாகும்.